பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவுக்கமைய பொலிஸ் நிலையங்களை 5S (Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் ஒரு அங்கமாக வடமாகாணத்தில் முதலாவது பொலிஸ் நிலையமாக கிளிநொச்சி பளை பொலிஸ் நிலையம் 5S (five S) திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பொலிஸ் நிலையத்தினை வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சி.ஏ.தனபால திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சமந்த டீசில்வா, கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் செனவரத்ன, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பளை பிரதேச கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.