இரத்மலானை பிரதேசத்தில் உந்துருளி ஒன்றை மோதி விபத்தினை ஏற்படுத்திவிட்டு காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் உந்துருளியில் துரத்திச் சென்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடுகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய காரின் சாரதியும் உடுகம்பொல மற்றும் கித்துல்கல பிரதேசங்களில் வசிக்கும் 19, 20 மற்றும் 26 வயதுடைய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்தின் போது அவர் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.