பொகவந்தலாவை தெரேசியா தோட்ட மோரா பிரிவில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் இன்று மதியம் சிறுத்தையால் தாக்கப்பட்டு பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார்.
55 வயது உடைய பெண் ஒருவர் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில் சிறுத்தையால் தாக்குதலுக்குள்ளான நிலையில் தோட்ட வாகனம் மூலம் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர் 55 வயதுடைய மாரியாய் என்பவர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.