‘என்னவளே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன் பின்னர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இவர் கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிப்பை தொடர்ந்து, தொழிலையும் நடிகை சினேகா துவங்கி இருக்கிறார். அதன்படி, சமீபத்தில், சென்னை நகரில் ஆடைக் கடையை திறந்துள்ளார்.
இந்நிலையில், நட்சத்திர தம்பதியான சினேகா மற்றும் பிரசன்னா தங்களது ஆடை கடையின் ஆடைகளை கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அணியக் கொடுத்து ஒய்யார நடை என்னும் ரேம்ப் வாக் விழாவினை நடத்தியுள்ளனர்.
அப்போது பிரசன்னா மற்றும் சினேகா பிரபலங்களின் விவாகரத்து மற்றும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது,
அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அதை நாம் மதிக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து, விஜய்யின் அரசியல் வருகை குறித்து. ‘அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். “கண்டிப்பாக நல்லது செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்” அதை நம்புகின்றோம். சினிமாவை விட்டு செல்ல முடிவெடுத்தது அவரது தனிப்பட்ட விடயம் என குறிப்பிட்டனர்.