நாட்டில் மாவீரர் தின கொண்டாட்டங்களுக்கு பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெலும் ஹர்ஷன என்ற நபருக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது தொடர்பான குற்றச்சாட்டு காணப்படவில்லை என்பதால் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.