நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டு சேர்த்துள்ளது.
நேற்றையதினம் (டிசம்பர் 02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து புறப்பட தயாரான வடதாரகை படகு இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதுடன் திருத்த வேலையினை முடித்து பயணத்தை தொடராலாம் என தெரிவித்திருந்த நிலையில் உடனடியாக மாற்று படகு சேவையும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
திருத்தவேலை செய்வது பயனளிக்காத நிலையில் வடதாரகை சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்தை தொடர்ந்து நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாலை முதல் துறைமுகப் பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளர்கள் என சுமார் 60 பேர் வரையில் காத்திருந்து பயணத்தினை தொடர்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.