வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் நேற்று(1) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் என்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
ADVERTISEMENT
குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.