தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கீழ் தேசத்திலிருக்கும் சகல தொழிற்சாலைகளையும் இலாபத்துடன் இயங்க வைக்கும் செயற்றிட்டத்தின் அடிப்படையில் வாழைச்சேனையின் பெரும் சொத்தாகக் கருதப்படும் தேசிய கடதாசி ஆலையின் புதிய தவிசாளராக முன்னாள் நீர்ப்பாசனத் தினைக்களத்தின் தலைமைப் பொறியிலாளர் உப்பாலி ரத்ணாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய தவிசாளராக கடமைகளைப் பொறுப்பேற்ற முன்னாள் நீர்ப்பாசனத் தினைக்களத்தின் தலைமைப் பொறியிலாளர் உப்பாலி ரத்ணாயக்கவை தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி மன்றத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் க.திலிப்குமார் சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது இயந்திரங்களை நவீனப்படுத்துவது, வினைத்திறனான உற்பத்தி, புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல்,தொழிற்சாலையை மீளப் புனரமைப்பதற்கான வெளிநாட்டு இலகு கடன்களை (1% க்கும் குறைவான வட்டியுள்ள soft loans) பெற்றுக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் என்பதாகப் பல்வேறு விடயங்களைப் பற்றியும் விரிவாகப் பேசியிருந்ததார்.அத்தோடு கடந்த காலங்களில் குறித்த கடதாசி ஆலையின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாகங்களின் நிலைமைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.