நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 53, 888 குடும்பங்களைச் சேர்ந்த 1,43,726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி 45, 418 குடும்பங்களைச் சேர்ந்த 116, 209 பேர் உறவினர் வீடுகளிலும், 8470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் 229 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 103 வீடுகள் முழுமையாகவும் 2635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.