நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையில் வெள்ள அனர்த்ததால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வெருகல் மற்றும் மூதூர் பிரதேசத்தின் இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் சந்தித்ததுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்,
மூதூரில் குமாரபுரம் , கட்டைப்பறிசான் ,இறால் பாலம் , இறால் குழி போன்ற பகுதிகளை பார்வையிட்டதுடன் வெருகல் முத்துசேனை, புண்ணையடி, மாவடிச்சேனை முதலிய ஊர்களில் மழை வெள்ளம் மற்றும் கங்கை ஆற்று வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்துடன் பிரதேச செயலகம் ஊடாக செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகளை சந்தித்து பல அறிவுரைகளையும் வழங்கினார்.
மேலும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு படகில் சென்று பார்வையிட்டு மக்களோடு மக்களுக்காக நான் இருக்கின்றேன் என உறுதியளித்து மக்களை ஆறுதல்படுத்தினார்.