மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு (30) அறிவிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தமானது மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய மேற்கொள்ளப்படவுள்ளது.
ADVERTISEMENT
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி நள்ளிரவு எரிபொருள் விலையில் இறுதியாகத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலையை தலா 6 ரூபாவினால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு அறிவிக்கப்படவுள்ளது.