மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு இன்றையதினம் கைதடியில் இடம்பெற்றது.முன்னாள் போராளிகள் நலம்புரிச் சங்க யாழ்மாவட்ட இணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.இதன்போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.இதன் பொழுது மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதோடு மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.










ADVERTISEMENT