பத்தரமுல்லையிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(22) காலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து பத்தரமுல்லை நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
இந்தத் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.