கிருலப்பனை, கொலொம்தொட்ட சரசவி உயன தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (21) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மூதாட்டி தனது கணவன் மற்றும் மகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ள நிலையில் சம்பவத்தன்று மூதாட்டியின் கணவரும் மகளும் வேலைக்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இதேவேளை, வீட்டில் இருந்த 8 பவுண் பெறுமதியான தங்க நகைகளும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.