திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் நேற்றையதினம்(20) தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணக்க வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட ச. குகதாசன் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் பிரதேச அபிவிருத்திக்கு தன்னாலான பங்களிப்புக்களை செய்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.
ADVERTISEMENT
அவர்களுடன் தம்பலகாமம் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் விஜய குமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.பாலசந்திரன், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





