வடமாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபாலனின் தனிப்பட்ட வாகனத்தை ஆளுநர் செயலக சாரதி ஒருவர் துப்புரவு செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஆளுநரின் செயலாளர் அலுவலக வாகனத்தை பயன்படுத்தாமல் தனது தனிப்பட்ட வாகனத்துக்கான எரிபொருளை செயலகத்திலிருந்து பெற்று வரும் நிலையில், அந்த வாகனத்தை சுத்தம் செய்வதற்காக வாகன சாரதி ஒருவரை ஈடுபடுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ADVERTISEMENT
ஆளுநர் செயலகத்தில் பிறிதொரு வாகனத்தின் சாரதியாக கடமையில் ஈடுபடும் ஒருவரை தனது தனிப்பட்ட வாகனத்தை துப்புரவு செய்யுமாறு பணிப்பது எவ்விதத்தில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.