கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (18) இரவு ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பாடசாலை மாணவன் கம்பஹா பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ADVERTISEMENT
கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கம்பஹா தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.