இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மின்னான பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
ADVERTISEMENT
எஹெலியகொட பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.