நுவரெலியா, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 24 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் நுவரெலியா, அக்கரப்பத்தனை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் ஆவார்.
ADVERTISEMENT
அக்கரப்பத்தனை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.