கண்டி, பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (11) பிற்பகல் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பூஜாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி கண்டி, அம்பதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடையவர் ஆவார்.
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி கடந்த 8 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சடலமானது பிரேதப் பரிசோதனைக்காகக் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூஜாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.