ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கோடியா வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. கந்தபளை இருந்து கொங்கோடியா நோக்கி மரக்கறி ஏற்றுவதற்காக பயணித்த லொறி ஒன்று கொண்கோடியா கீழ் பிரிவு பிரதேசத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ADVERTISEMENT
இவ் விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 43 வயதுடைய ஒருவர் உயிரிந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.