ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் தயாரித்த சந்தேக நபர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான குறித்த சந்தேகநபர் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ADVERTISEMENT
ஜனாதிபதியின் உருவத்துடன் போலியான 5000 ரூபா நாணயத்தாள் ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்ட சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.