பிரித்தானியாவில் மேலும் இருவர் குரங்குக் காய்ச்சலுடன் (Mpox) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவை புதிய Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ADVERTISEMENT
முன்னதாக அடையாளம் காணப்பட்ட நபர் ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சல் பரவிய பகுதிகளுக்குப் பயணம் செய்திருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த நபரின் வீட்டில் உள்ள மேலும் இருவருக்கு தற்போது நோய் பரவியுள்ளதாக மருத்துவப் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
இதனால் பிரித்தானியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.