செர்பியா நாட்டின் வடக்கு மாகாணம் ஓஓடினா மாகாணம் நோவி சட் நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திடீரென ரயில் நிலையத்தின் கொங்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் சிறுமியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டுள்ளனர்.
ADVERTISEMENT
உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் , செர்பியா நாட்டில் இன்று துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.