கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று வெள்ளிக்கிழமை (01) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.
ருவன்வெல்ல மற்றும் பசறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 33 மற்றும் 34 வயதுடைய இரு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.