பலாங்கொடை – கதிர்காமம் பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (31) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண்கள் பயணித்த பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, பஸ்ஸில் பயணித்த 14 பெண்கள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.