அனைத்து விதமான போட்டிகளிலும் தலைவர் பொறுப்பை வகிக்க டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது. டேவிட் வார்னரின் கோரிக்கைக்கு அமைய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
2018ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்தியதற்காக வார்னருக்கு ஓராண்டு விளையாடுவதற்கு தடையும், அணித் தலைவராகச் செயற்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.
எனினும் தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வார்னர் ஓய்வு பெற்றிருந்தாலும் தடை நீக்கம் காரணமாக BBL தொடரில் அணித் தலைவராகச் செயற்பட வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.