இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான 6 கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலஸ்முல்ல போவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
சந்தேக நபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் இன்று (23) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.