களுத்துறை நாகொட பிரதேசத்தில் 06 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த 70 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், அவர் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய மகன் இத்தாலியில் இருந்து 6 மாதங்களாக தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட போதிலும் அவர் பதிலளிக்கவில்லை.
இதன் காரணமாக தந்தையை பார்ப்பதற்காக மகன் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். வீட்டிற்கு சென்ற மகன் கதவைத் திறந்தபோது, உருகிய சதையுடன் கூடிய எலும்புக்கூடுகள் மட்டுமே கட்டிலில் கிடந்ததனை மகன் அவதானித்துள்ளார்.
பின்னர் குறித்த சடலமானது நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இவரின் தந்தையா என்பதை உறுதிப்படுத்த DNA மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.