மொரந்துடுவ – ஹொரணை வீதியில் பரகஸ்தொட்ட மஹாவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கொனடுவ, மொரந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மில்லனியாவில் இருந்து மொரந்துடுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சிறு பாலம் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கோனதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.