கம்பஹா, வெலிவேரிய, எம்பறலுவ தெற்கு பிரதேசத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 58 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் களுபோவிட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான இந்த யுவதி, பாலும்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட யுவதியிடமிருந்து இருந்து 05 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.