கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 35 ஊழியர்கள் இன்று சனிக்கிழமை (19) பிற்பகல் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
ADVERTISEMENT
ஊழியர்கள் ஆடை தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட பின்னர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திடீரென சுகயீனமுற்றுள்ளனர். இதனையடுத்து, சுகயீனமுற்ற ஊழியர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.