ஜப்பானின் நோடா பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
குறித்த நில அதிர்வின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ADVERTISEMENT
அத்துடன் நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.