இன்று காலை சாமி மலைப் பகுதியில் உள்ள ஸ்டொக்கம் தோட்ட ஸ்காபிரோ பிரிவில் உள்ள அதி உயர் மின் மாற்றி பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் உள்ளது என பணிக்கு சென்ற தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தோட்ட நிர்வாகம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்கு அறிவித்தனர். குறித்த விடயத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
ADVERTISEMENT
வன பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.