கொடதெனியாவ ஹல்ஒலுவ கந்த பிரதேசத்தில் உள்ள நீர் நிரம்பிய குழியில் மூழ்கி மாணவன் ஒருவன் நேற்று புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வராதல, கொட்டதெனியாவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ADVERTISEMENT
உயிரிழந்த மாணவன் தனது 05 நண்பர்களுடன் இணைந்து நேற்று புதன்கிழமை (16) மாலை நீர் நிரம்பிய குழியில் நீராடச் சென்றுள்ளார். இதன்போது, மாணவன் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடதெனியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.