எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, பொதுத் தேர்தலுக்கான உத்தியோக பூர்வமான வாக்காளர் அட்டைகள் அக்டோபர் 27 , 31 மற்றும் நவம்பர் 03 ஆகிய திகதிகளில் வழங்கப்படும்.
நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் உத்தியோக பூர்வமான வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களது பிரதேசங்களில் உள்ள தபால் அலுவலகங்களுக்குச் சென்று உத்தியோக பூர்வமான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .