கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கோட்டை ரெக்லமேஷன் வீதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த சந்தேக நபர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோட்டை பொலிஸ் OIC – 071-8591555, குற்றப் புலனாய்வுப் பிரிவு – கோட்டை – 071-8594405