மஸ்கெலியா சென் ஜோசப் தேவாலய 2024 திருச்சுருப பவணி விழா இன்று 13.10.2024, மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா நகரிலிருந்து 2 ம் வீதி வழியாக வருகை தந்து பிரதான வீதியில் நுழைந்து மீண்டும் 7 ம் வீதியில் சென்று, அஞ்சலக வீதி வழியாக தேவாலயத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு பிரதம பங்கு தந்தை குணசேகரன் அடிகளார் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது.
நிகழ்வில் மறே, நல்லதண்ணி, லக்சபான, லக்கம், மவுசாக்கலை, புரவுன்லோ, கங்கேவத்தை, மற்றும் சாமிமலை பகுதியில் உள்ள 3000 க்கும் மேற்பட்ட கிறித்தவ மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ADVERTISEMENT
இறுதியில் அனைவரும் புனித சென் ஜோசப் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.


