புத்தளம், மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியிலிருந்து நேற்று (10) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், சடலமானது பிரேதப் பரிசோதனைக்காகச் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.