அநுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தனது 76வது வயதில் காலமானார்.
நேற்று வியாழக்கிழமை (10) ஏக்கநாயக்க அவரது வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அமைச்சருக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கிக் கொண்டிருந்த ஒருவர், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்றமையால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.