தந்தையின் பணப் பரிமாற்ற வங்கி அட்டையைப் பயன்படுத்தி 37160 ரூபாய் பணத்தை மோசடி செய்த 35 வயது உடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளார்.
இச் சம்பவமானது நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட, எமில்ட்டன் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
தந்தை முனியாண்டி முருகன் அளித்த புகாரைத் தொடர்ந்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிபுரையில் குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.