ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் சார்பில் இந்த அழைப்பிதழை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் ஹரிணி அமரசூரிய. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜெய்சங்கர் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு வந்த உயர்மட்ட இராஜதந்திரி ஆவார்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்த பின்னர், இரு நாட்டு மக்களின் நலனுக்காக தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் ஆலோசித்துள்ளனர்.