புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகொலவெவ பிரதேசத்திலுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உனவதுன அம்பகொலவெவ பகுதியைச் சேர்ந்த எஸ்.எம்.ஜயதிலக என்ற 47 வயதுடைய மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
அம்பகொலவெவ பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், நேற்று (23) ஏரிக்கு அருகில் அமைந்துள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.