புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்று திங்கட்கிழமை (23) வழங்கிவைக்கப்பட்டது.
இவரை தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது.
ADVERTISEMENT
சம்பத் துயகொண்டா இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் விமானியாக செயற்பட்டுள்ளார்.