டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதற்கு உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.
டெலிகிராம் செயலி பயனர்களின் இரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாக உக்ரைன் இராணுவ புலனாய்வு துறை தெரிவித்ததையடுத்து, அரசாங்கத்துக்குச் சொந்தமான கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்நிலையில், அரசு மற்றும் இராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதை உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.