திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள பாலத்தோப்பூர் வாய்க்காலில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெருகல் கோயிலுக்குச் சென்று திருகோணமலை நோக்கி செல்லும்போது இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.திருகோமணமலை நகரைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்விபத்தை எதிர் கொண்டுள்ளது.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகிறது.
