சட்டவிரோதமான முறையில் புற்று நோய் தடுப்பு மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பெங்களூரில் இருந்து நாட்டிற்கு வந்த போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
சந்தேகநபர் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் விமானம் மூலம் மருந்துகளை கடத்தி, நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வந்தவர் என தெரியவந்துள்ளது.