பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பகிர்ந்து கொள்ளல் தொடர்பான நிகழ்வொன்று திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வை கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாடு செய்திருந்தது.
ADVERTISEMENT
உள்ளடக்கிய ஆட்சிக்கான குடிமக்களின் குரல் மற்றும் முன் முயற்சி திட்டத்தின் கீழ் பிரஜைகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பகிர்ந்து கொள்ளல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
குறித்த மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புஹாரி முஹம்மட் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் , இளைஞர் யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


