நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வாகனமொன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்திலுள்ள அகெயி நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
அங்குள்ள நெடுஞ்சாலையில் எரிபொருளை ஏற்றிக்கொண்டுசென்ற கொள்கலன் வாகனத்துடன் அந்த நெடுஞ்சாலையில் எதிரே வேகமாக வந்த மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இரு வாகனங்களும் வெடித்து சிதறியதில் 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.