ஜேர்மனியின் மியுனிச் நகரில் உள்ள இஸ்ரேலிய துணை தூதரகத்திற்கு அருகில் சந்தேகநபர் ஒருவர் மீது ஜேர்மனி பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இஸ்ரேலின் துணைதூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் ஆகியன அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
சந்தேகநபர் காயமடைந்துள்ளார் வேறு சந்தேகநபர்கள் இருப்பதாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிபோன்ற ஒன்றுடன் காணப்பட்ட நபர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.